தமிழ்நாடு

அலர்ட்; துப்பாக்கி, தோட்டாக்களை தயாராக வைத்திருக்க எஸ்.பி.,...தேர்தல் பணி கண்காணிப்புக் குழுவினருக்கு ஆலோசனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் நடமாடும் காவலர் கண்காணிப்புக் குழுவினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என எஸ்.பி., ஆலோசனை வழங்கினார்.மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, 9 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் தேர்தல் பொறுப்பு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் நடமாடும் காவலர் கண்காணிப்புக் குழுவினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என எஸ்.பி., ஆலோசனை வழங்கினார்.மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, 9 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் தேர்தல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட தேர்தலுக்காக, 69 நடமாடும் கண்காணிப்பு குழுவினரும், இரண்டாம் கட்ட தேர்தலுக்காக 66 நடமாடும் கண்காணிப்பு குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒரு குழுவில், 1 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் உள்ளனர். மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடியாக உள்ள 139 மையங்களில், ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதலாக 4 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதுதவிர தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, முதல் கட்ட தேர்தலின் போது 1,000 போலீசாரும், இரண்டாம் கட்ட தேர்தலின் போது 1,100 போலீசாரும் பணியில் ஈடுபட உள்ளனர்.இதற்காக, கடலுார் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் 60 போலீசாரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து சில போலீசார்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகின்றனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சியில், தேர்தல் பணியில் ஈடுபடும் நடமாடும் காவலர் கண்காணிப்பு குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜவஹர்லால், விஜயகார்த்தி, சுப்புராயன், தேர்தல் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் எஸ்.பி., ஜியாவுல்ஹக் தலைமை தாங்கி பேசியதாவது:வரும் 4ம் தேதிக்கு முன் காவலர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்திற்குச் சென்று அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.ஓட்டுச்சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர்கள், வி.ஏ.ஓ., மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் அலுவலர்களின் தொடர்பு எண்களை அட்டவணைப் படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிக்குச் செல்லும் வரைபடத்தை வைத்திருக்க வேண்டும்.ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்றடைந்ததும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நடமாடும் குழுவினர் அனைவரும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.பிரச்னை ஏற்படும் போது உயரதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகே தடியடி மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகளை வரிசைப்படுத்தி, ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும்.ஓட்டுச்சாவடிக்கு கூட்டமாக வருபவர்களை வாக்காளர்கள்தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டால் நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு எஸ்.பி., எஸ்.பி., ஜியாவுல்ஹக் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X