பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரின வாரவிழா ‛'லோகோ டிசைன்' போட்டி

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தமிழ்நாடு வனத்துறை சார்பில், வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, குறும்படங்கள் மற்றும் லோகோ டிசைன் போட்டி நடக்கிறது.ராமநாதபுரம் வனஉயிரின காப்பக ரேஞ்சர் வெங்கடேஷ்கூறியதாவது: வனத்துறை வாரவிழா அக்., 2 முதல் 8 வரைகடைபிடிக்கப்படுகிறது.இதில் குறும் படம் போட்டியில் 18 வயதுக்கு கீழ்உள்ளவர்கள் 3 நிமிடங்களும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 முதல் 10நிமிடங்கள் வரை கடல்வாழ்

ராமநாதபுரம் : தமிழ்நாடு வனத்துறை சார்பில், வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, குறும்படங்கள் மற்றும் லோகோ டிசைன் போட்டி நடக்கிறது.

ராமநாதபுரம் வனஉயிரின காப்பக ரேஞ்சர் வெங்கடேஷ்கூறியதாவது: வனத்துறை வாரவிழா அக்., 2 முதல் 8 வரைகடைபிடிக்கப்படுகிறது.இதில் குறும் படம் போட்டியில் 18 வயதுக்கு கீழ்உள்ளவர்கள் 3 நிமிடங்களும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 முதல் 10நிமிடங்கள் வரை கடல்வாழ் உயிரினங்கள், பாலுாட்டிகள், நீர்பறவைகள்,பறவைகள் கூடுகட்டும் வழிமுறைகள், பருவநிலை மாற்றங்கள்,வன,மனித இன மோதல்கள், குளங்கள், கண்மாய்களில் உயிரினங்கள்வாழ்வு ஆகியவை பற்றி குறும்படங்கள் எடுத்து அனுப்ப வேண்டும்.

முதல்பரிசு அசாம் கஜீரங்கா தேசியப்பூங்காவிற்கும், 2வது பரிசு கர்நாடகா ஜங்கீள் லாட்ஜ்க்கும், மூன்றாவதுபரிசு முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதேபோல லோகோ டிசைன்'' போட்டியும் நடக்கிறது. இதில்ராமநாதபுரம் கடல்பசு பாதுகாக்கப்பட்ட பகுதி, ஸ்ரீவில்லிபுத்துார்மேகமலை புலிகள் காப்பகம், அகஸ்தியர் மலை யானைகள் காப்பகம்ஆகிய இடங்களில் பயன்படுத்தும் வகையிலான லோகோ' டிசைன் வடிவமைத்து அனுப்பலாம்.அக்.,3க்குள் தங்களது படைப்புகளை gommnp@gmail.com என்ற இணையத்தில் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம்மாவட்ட வனஉயிரின காப்பகம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X