பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானையால் ரேஷன்கடை சேதம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பெரியூர் சந்தனபலாபட்டியில் காட்டு யானை ஒன்று ரேஷன் கடையை சேதப்படுத்தியது.ஆடலூர், பெரியூர், கே.சி.பட்டி, மன்றவயல், மன்றக் கால்வாய் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இங்குள்ள வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.வனத்துறையினர் விரட்டினாலும் போக்கு காட்டுகின்றன. ரேஷன் கடையை

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பெரியூர் சந்தனபலாபட்டியில் காட்டு யானை ஒன்று ரேஷன் கடையை சேதப்படுத்தியது.

ஆடலூர், பெரியூர், கே.சி.பட்டி, மன்றவயல், மன்றக் கால்வாய் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இங்குள்ள வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.வனத்துறையினர் விரட்டினாலும் போக்கு காட்டுகின்றன. ரேஷன் கடையை சேதப்படுத்திய யானை, அரிசி உள்பட உணவுப் பொருளை துாக்கி வீசி பாழ்படுத்தியது.

குடியிருப்பு அருகே நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.கொடைக்கானல் பேத்துப்பாறை அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர் பகுதியிலும் பகலில் காட்டு யானைகள் நடமாடுவதால் குடியிருப்புவாசிகள் அஞ்சுகின்றனர். வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.மேல்மலையில் யானைஇதேபோல மேல்மலையான மன்னவனூரில் விவசாய தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தின. இவ்வூராட்சியின் கீழானவயல், கார்த்திகல் பகுதியில் பேரிஜத்தில் இருந்து இடம் பெயர்ந்த யானைகள் விவசாய பயிர்கள் மற்றும் வாழைகளை சேதப்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X