சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்-சம்பள பாக்கியை வழங்கக்கோரி கடலுாரில் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் அரசு பெரியார் கலைக்கல்லுாரியில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.எனவே, சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். கேரளா, ஆந்திராவில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக் கழக மானியக்குழு

கடலுார்-சம்பள பாக்கியை வழங்கக்கோரி கடலுாரில் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் அரசு பெரியார் கலைக்கல்லுாரியில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.எனவே, சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். கேரளா, ஆந்திராவில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்குவது போன்று தமிழகத்திலும் சம்பளம் வழங்க வேண்டும்.பணி பாதுகாப்பு, சிறப்பு டி.ஆர்.பி., மூலமாக பணிவரன் முறைப்படுத்த வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.விரிவுரையாளர்கள் இளவரசன், பொன்னம்பலம், செல்வகணபதி, மாறன், சங்கரி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X