பொது செய்தி

தமிழ்நாடு

இருதய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்-ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, இருதய நோய் வராமல் தடுக்க முடியும் என, இருதய நோய் நிபுணர் கல்யாணராமன் ஆலோசனை தெரிவித்தார்.உலக இருதய நோய் தினத்தையொட்டி, கடலுார் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.மருத்துவமனையின் டாக்டர் கல்யாணராமன் வழங்கிய

கடலுார்-ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, இருதய நோய் வராமல் தடுக்க முடியும் என, இருதய நோய் நிபுணர் கல்யாணராமன் ஆலோசனை தெரிவித்தார்.உலக இருதய நோய் தினத்தையொட்டி, கடலுார் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.மருத்துவமனையின் டாக்டர் கல்யாணராமன் வழங்கிய ஆலோசனையில், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என, வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், இருதய பிரச்னைகள் குறைவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் சக மனிதர்களின் இருதய பிரச்னைகளும் குறைய வழிவகை செய்யும்' என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X