பொது செய்தி

தமிழ்நாடு

'கழிவு நீரால் பாழாகலாமா பழநி தட்டான்குளம்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
பழநி : 'கழிவுநீரால் மாசடைந்து வரும் பழநி தட்டான்குளத்தை காப்பாற்ற வேண்டும்' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். -பழநி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியின் அருகில் உள்ளது தட்டான்குளம். இக்குளத்தின் மூலம் 170 ஏக்கர் பாசன வசதி நடைபெற்று வருகிறது.இக்குளத்திற்கு பெரியகுளத்தில் இருந்து பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த தண்ணீர் வரத்து கால்வாய் தற்போது
 'கழிவு நீரால் பாழாகலாமா பழநி தட்டான்குளம்'

பழநி : 'கழிவுநீரால் மாசடைந்து வரும் பழநி தட்டான்குளத்தை காப்பாற்ற வேண்டும்' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். -

பழநி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியின் அருகில் உள்ளது தட்டான்குளம். இக்குளத்தின் மூலம் 170 ஏக்கர் பாசன வசதி நடைபெற்று வருகிறது.இக்குளத்திற்கு பெரியகுளத்தில் இருந்து பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த தண்ணீர் வரத்து கால்வாய் தற்போது புதர்கள் மண்டி, முற்றிலும் மாசடைந்து கிடக்கிறது.

இதனால் தட்டாங்குளத்திற்கான தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.இக்கால்வாய் மூலம் ஆயக்குடி மற்றும் சிவகிரிபட்டி பேரூராட்சிகளின் கழிவுநீரும் இக்குளத்தில் கலந்து வருகிறது. மேலும் இக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குளமே மாசடைந்துள்ளன. கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.குளத்தின் ஒரு பகுதியில் சுடுகாடு உள்ளது. குளத்தில் தண்ணீர் நிரம்பும் போது சுடுகாடு முற்றிலும் மூழ்கிவிடும். இங்கு குடிமராமத்துப் பணியின்போது குளத்தின் கரைகள் சீரமைக்கப்படவில்லை.அத்துடன் மதகுகளும் பழுதடைந்து உள்ளதால் தேங்கும் தண்ணீர் முழுவதும் வீணாகி வருகிறது. குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சாலை அமைத்துள்ளனர். இதனால் குளத்திற்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வருவதில்லை.பொதுமக்கள் கூறுவதென்ன:மாசடைந்து வரும் குளம்பொன்னாபுரம் முத்துராமன்: குளத்தின் அருகிலேயே எங்கள் தோட்டம் உள்ளது.

இங்கு கழிவுநீர் கலப்பதால் சுகாதாரமின்றி குளம் மாசடைந்து வருகிறது. மதகு பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் தேங்குவதில்லை. பிரதான வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் வருவது தடைபடுகிறது. பொதுப்பணித் துறையினர் பிரதான வாய்க்கால் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும். இதனை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.நடவடிக்கை அவசியம்பொன்னாபுரம் சங்கர்: குளத்தில் தண்ணீர் தேங்குவது தடைபடுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து குளத்திற்கு நீர் முழுவதுமாக வருவதை தடுக்கும் வகையில் மண் சாலை அமைத்து உள்ளனர். எனவே குளத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X