பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும்

Added : செப் 30, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். அமைச்சர் மதிவேந்தன் மற்றும் அதிகாரிகள் நேற்று படகில் சென்று வனக்காடுகளுக்கு மத்தியில்

பரங்கிப்பேட்டை-பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். அமைச்சர் மதிவேந்தன் மற்றும் அதிகாரிகள் நேற்று படகில் சென்று வனக்காடுகளுக்கு மத்தியில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி, இயற்கை சூழலுடன் கால்வாய்கள் மற்றும் சுற்றுலா வளாகத்தில் உள்ள பார்வையாளர் கோபுரம், தங்கும் அறைகள், கழிவறை போன்ற இடங்களை, ஆய்வு செய்தார்.பின்னர், அமைச்சர் கூறியதாவது;பிச்சாவரம் சுற்றுலா மையத்தை கூடுதல் வசதிகளுடன், மேம்படுத்தப்படுத்த என மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்காக, இங்கு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக, அறைகள் உடனடியாக திறக்கப்படும். அடிப்படை வசதிகள் சீரமைக்கப்படும். படகு சவாரி நேரம் அதிகப்படுத்தப்படும். பிச்சாவரத்திற்கு கூடுதல் வசதிகள் செய்வதற்காக தனி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.குழந்தைகள் விளையாட பூங்கா, ஊஞ்சல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிபார்க்கும் வகையில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.விடியல் விழா மீண்டும் நடத்தப்படும். இங்குள்ள பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். படகு டிரைவர்களுக்கு ஓய்வு அறை மற்றும் ஊதியம் அதிகப்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.ஆய்வின்போது, சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப்நந்துாரி, கலெக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட வன அலுவலர் செல்வம், சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் சபேசன், தி.மு.க., ஒன்றிய செயலர் கலையரசன், நகர செயலர் கிள்ளை ரவீந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, மேலாளர் தினேஷ், செயல் அலுவலர் தங்கவேல் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X