பொது செய்தி

தமிழ்நாடு

வில்பட்டி தேர்தல் வில்லங்கம் அலுவலரை மாற்ற வலியுறுத்தல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : வில்பட்டி இடைத்தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் அக்.9 ல் நடக்கிறது. தேர்தல் களத்தில் நால்வர் உள்ளனர். கொடைக்கானல் பி.டி.ஓ., தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஆளும் கட்சி யினருக்கு சாதகமாக

கொடைக்கானல் : வில்பட்டி இடைத்தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் அக்.9 ல் நடக்கிறது. தேர்தல் களத்தில் நால்வர் உள்ளனர். கொடைக்கானல் பி.டி.ஓ., தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஆளும் கட்சி யினருக்கு சாதகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவாகும் ஓட்டுப் பெட்டிகளை ஒன்றிய அலுவலகத்தில் வைப்பதற்கும், ஓட்டு எண்ணிக்கை இங்கு நடப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.

இதையடுத்து ஆளும் கட்சியின் ஆதரவு வேட்பாளர் தவிர்த்து, மற்ற மூவரும் தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும். ஓட்டு எண்ணும் மையம், ஓட்டுப் பெட்டிகள் வைக்கும் இடம் ஆகியவற்றையும் மாற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர், கலெக்டர், ஆர்.டி.ஓ.,வுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X