வீணாகிறது ; குற்ற வழக்கில் பறிமுதலான வாகனங்கள்...ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்| Dinamalar

தமிழ்நாடு

வீணாகிறது ; குற்ற வழக்கில் பறிமுதலான வாகனங்கள்...ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Added : செப் 30, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் முறைப்படி ஏலம் விடப்படாமல் மக்கி வீணாகி வருகின்றன.கடலுார் மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு என பல்வேறு பிரிவு அலுவலகங்களில், குற்றங்கள், விபத்துகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
 வீணாகிறது ; குற்ற வழக்கில் பறிமுதலான வாகனங்கள்...ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் முறைப்படி ஏலம் விடப்படாமல் மக்கி வீணாகி வருகின்றன.

கடலுார் மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு என பல்வேறு பிரிவு அலுவலகங்களில், குற்றங்கள், விபத்துகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குவிந்து கிடக்கிறது.கோர்ட் வழக்கு முடிந்த பிறகு, முறையான ஆவணங்களை காண்பித்து, தங்களின் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல முன்வருவதில்லை.

இதனால், போலீஸ் நிலையங்களில் கார், இரு சக்கர வாகனங்கள் ஏராளமானவை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவிந்து கிடக்கின்றன.அவை முறையான அனுமதி பெற்று, ஏலம் விடப்படாமல், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு, மண்ணோடு மண்ணாக புதைந்து வீணாகி வருகிறது. நீண்ட நாட்களக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறி வருகிறது.கடந்த 13.9.21 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலளிக்கும்போது, முதல்வர் காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் விடும் முறையை எளிமையாக்கி சம்பந்தப்பட்ட காவல் ஆணையர், எஸ்.பி., ஆகியோர்களுக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதன் முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாவட்ட எஸ்.பி., க்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதன்படி போலீஸ் ஸ்டேஷன்களில் உரிமை கோரப்படாமல் இருந்த வாகனங்கள் திருவள்ளூர், தஞ்சாவூர், கரூர், சேலம், மதுரை மாவட்டத்தில் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் உரிமை கோரப்படாத இரு சக்கர வாகனங்கள் 1,222, நான்கு சக்கர வாகனங்கள் 103 மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் 2.60 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதேப்போல கடலுார் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கடத்தி வரப்படும் வாகனங்கள் மற்ற மாவட்டங்களை விட அதிகளவில் உள்ளன. இது தவிர குற்ற வழக்குகள் தொடர்புடைய வாகனங்களும் குவிந்து கிடக்கின்றன. அவை ஆண்டு கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மண்ணோடு மண்ணாக மக்கி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை ஏலம் விட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X