பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சிதம்பரம்-பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தை 2013ல் தமிழக அரசு கையகப்படுத்தியது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு கல்லுாரிகளில் பணி நிரவலில் பணிபுரிகின்றனர்.பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதியம்

சிதம்பரம்-பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தை 2013ல் தமிழக அரசு கையகப்படுத்தியது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு கல்லுாரிகளில் பணி நிரவலில் பணிபுரிகின்றனர்.பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி, கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பணி புரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.ஊழியர் சங்க முன்னாள் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுச்செயலாளர் ரவி, மனோகரன் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மூத்த தலைவர் மூசா தொடங்கி வைத்தார்.பல்கலை ஊழியர் சங்க முன்னாள் தலைவர் கூறுகையில், 'பல்கலைக் கழகத்தில், பல்வேறு நிலைகளில் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகின்றனர்.இவர்களை, பணி நீக்கம் செய்யலாமா என, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு யோசனை எழுந்துள்ளதாக அறிகிறோம். எனவே தமிழக முதல்வர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X