பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதங்கள் வாங்குகிறார்களா போலீசார் கண்காணிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்-குற்ற செயலுக்காக கத்தி, அறிவாள் வாங்கினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கத்தி, அரிவாள் தயாரிக்கும் கொல்லர் பட்டறை, விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்க வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்டம் முழுவதும் 33

கடலுார்-குற்ற செயலுக்காக கத்தி, அறிவாள் வாங்கினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கத்தி, அரிவாள் தயாரிக்கும் கொல்லர் பட்டறை, விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்க வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவிட்டார்.அதன்படி, மாவட்டம் முழுவதும் 33 இடங்களில், கொல்லர் பட்டறை உரிமையாளர்கள், விற்பனை செய்பவர்கள் வரவழைக்கப்பட்டு, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 218 பேர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கத்தி, அரிவாள், மற்றும் கூர்மையான ஆயுதங்கள் வாங்குபவர்களின் தகவல் பதிவு செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு வாங்குகிறார்கள் என ஊர்ஜிதம் செய்து விற்பனை செய்யவேண்டும், குற்றச்செயலுக்காக கத்தி, அரிவாள் வாங்குபவர்கள் குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. குற்ற செயல்கள் செய்பவர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும், பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் போலீசுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X