அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கமல் கட்சி ஆட்சிக்கு வராததால் தமிழகம் பிழைத்தது!

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆ.கண்ணன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., வள்ளல் குணம் மிக்கவர். அதனால் தான் அவரை, மக்கள் தங்கள் தலைவராக கொண்டாடினர். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், தேர்தல் பிரசாரத்தின் போது, 'நான் எம்.ஜி.ஆரின் நீட்சி' என்றார்; அதை ஏற்று கொள்ள முடியவில்லை.
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆ.கண்ணன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., வள்ளல் குணம் மிக்கவர். அதனால் தான் அவரை, மக்கள் தங்கள் தலைவராக கொண்டாடினர். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், தேர்தல் பிரசாரத்தின் போது, 'நான் எம்.ஜி.ஆரின் நீட்சி' என்றார்; அதை ஏற்று கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆரிடம் இருக்கும் எந்த குணம் கமலிடம் இருக்கிறது?


latest tamil news


கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, இவரது வேட்பு மனுவில் காட்டிய சொத்தின் மதிப்பு 176 கோடி ரூபாய். கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். 176 கோடி ரூபாய் சொத்து உடைய கமல், கொரோனா நிவாரணத்திற்கு எந்தவித நிதியுதவியும் வழங்கவில்லை.

கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்வீர்களா?' என, நிருபர்கள் கேட்ட போது, அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? 'நான் வருமான வரி செலுத்துகிறேன். என்னால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்' எனக் கூறினார். இவரா, எம்.ஜி.ஆரின் நீட்சி?


latest tamil news


நிதியுதவி செய்வது என்பது தனிப்பட்ட உரிமை; அதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், வாரி கொடுத்த வள்ளலான எம்.ஜி.ஆரின் நீட்சி என, கமல் கூறியதைத் தான் ஏற்கவே முடியவில்லை. சட்டசபை தேர்தலில் ம.நீ.ம., படு தோல்வி அடைந்தது. அதன் பின் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தன்னைத் தானே தலைவராகவும், பொதுச் செயலராகவும் அறிவித்து கொண்டார். தன் கட்சி உறுப்பினர்கள் மீது கமலுக்கு அவ்வளவு, 'நம்பிக்கை!'

நல்ல வேளை இவரது கட்சி ஆட்சிக்கு வரவில்லை. வந்திருந்தால் இவரே எல்லா அமைச்சர் பொறுப்புகளையும் ஏற்றிருப்பார். தமிழகம் பிழைத்தது! இவரை போல சினிமா வெளிச்சத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்திற்கு வருவோர், 2 அல்லது 3 சதவீத ஓட்டுகளை தான் பிரிக்க முடியும்; ஒரு காலமும் ஆட்சியை பிடிக்க முடியாது. எனவே கமல், கட்சியை கலைப்பது தான் அவருக்கும், தமிழகத்திற்கும் நல்லது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil kumar - coimbatore,இந்தியா
30-செப்-202120:36:41 IST Report Abuse
Senthil kumar இது தவறான கருத்து. திருட்டு ரயில் ஏறியவர்கள் இன்று ஆசிய கண்டத்தில் பெரும் பணக்காரர்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-செப்-202119:54:26 IST Report Abuse
S. Narayanan வருமானவரி வருமானம் பெறுபவர் அனைவரும் வரி கட்டவேண்டும் என்பது இந்தியாவின் சட்டம். நன்கொடை கொடுக்க வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது. ஆனால் MGR அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எந்த தகவலும் இல்லை.மாறாக அவர் தமிழ் மக்களுக்கு சாதி மதம் பாராமல் எல்லோருக்கும் வாரி வழங்கி இருப்பதால் தான் அவரை உலகம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கமல் நான் வருமானவரி காட்டுகிறேன் என்று கூறுகிறார். அப்போ மற்றவர்கள் கட்டவில்லையா. இவர் மக்களுக்கு என் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அதனால் இவருக்கு MGR போல பரந்த மனது இல்லை என்று தெரிகிறது. அதனால் இவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு தாராளமாக எதையும் செய்ய மாட்டார் என்று தெரிகிறது.
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
30-செப்-202122:38:50 IST Report Abuse
எதிர்க்குரல் கேவலன் எம் ஜி ஆர் பிரபாகரனுக்கு கொடுத்த இரண்டு கோடி வெள்ளை பணமா? மக்களின் மூட தனத்தை பயன் படுத்தி கொண்ட பவுடர் டப்பா. வாரி கொடுத்தானா?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-செப்-202119:17:55 IST Report Abuse
sankaseshan ஆளும் கட்சியில் மட்டும் என்ன வாழுதாம் சினிமாவை வைத்து பத வியை புடித்தவர்கள் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X