6 வயது சிறுமியிடம் அத்துமீறியவர் கைது| Dinamalar

6 வயது சிறுமியிடம் அத்துமீறியவர் கைது

Added : செப் 30, 2021
Share
ஆனேக்கல்-வீடு முன் விளையாடிய, 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை, பொது மக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெங்களூரு ஆனேக்கல்லில் குடும்பத்துடன் வசிக்கும் சிறுமி, மனநலம் பாதித்தவர். இவர் நேற்று முன் தினம், தன் வீடு முன் விளையாடி கொண்டிருந்தார்.பக்கத்தில் வசிக்கும் சந்திரப்பா என்பவர், சிறுமிக்கு சாக்லெட் ஆசை காண்பித்து, பாழடைந்த

ஆனேக்கல்-வீடு முன் விளையாடிய, 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை, பொது மக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பெங்களூரு ஆனேக்கல்லில் குடும்பத்துடன் வசிக்கும் சிறுமி, மனநலம் பாதித்தவர். இவர் நேற்று முன் தினம், தன் வீடு முன் விளையாடி கொண்டிருந்தார்.பக்கத்தில் வசிக்கும் சந்திரப்பா என்பவர், சிறுமிக்கு சாக்லெட் ஆசை காண்பித்து, பாழடைந்த கட்டடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து சிறுமியை காப்பாற்றி, அந்த நபரை பிடித்து, அடித்து துவைத்து சூர்யசிட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி மேலும் அதிர்ச்சி அடைந்து, குளியலறைக்குள் சென்று, கதவை உட்புறமாக தாழிட்டு உள்ளேயே அமர்ந்திருந்தார்.நீண்ட நேரமாகியும் அவர் வராததால், கதவை உடைத்து சிறுமியை அழைத்து வந்தனர். கதவை உடைக்கும் போது, அவரது தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X