வக்கீலை கடத்தி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சினிமா துணை நடிகர்கள் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு-வக்கீலை கடத்தி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சினிமா துணை நடிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரை தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக இருப்பவர் வக்கீல் அபய் ரவீந்திரா குல்கர்ணி, 45. இவரிடம் தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வது தொடர்பாக சித்தேஷ் என்பவர் தொடர்பு கொண்டார். பேச்சு நடத்தி முடித்து, சித்தேசிடம் அபய் ரவீந்திரா கட்டணமாக சில

பெங்களூரு-வக்கீலை கடத்தி, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சினிமா துணை நடிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரை தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக இருப்பவர் வக்கீல் அபய் ரவீந்திரா குல்கர்ணி, 45. இவரிடம் தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வது தொடர்பாக சித்தேஷ் என்பவர் தொடர்பு கொண்டார். பேச்சு நடத்தி முடித்து, சித்தேசிடம் அபய் ரவீந்திரா கட்டணமாக சில நாட்களுக்கு முன் 7 லட்சம் ரூபாய் பெற்று கொண்டார். இந்த பணத்தை திருப்பி தருமாறு அபய் ரவீந்திராவிடம் சித்தேஸ் கேட்டார். அதற்கு மறுக்கவே அபய் ரவீந்திராவை, சித்தேஸ் கடத்த திட்டமிட்டார். அதன்படி சினிமா துணை நடிகர்களான சஞ்சய், 28, அருண், 30, அசோக் நரேஷ், 27, ஆகியோரிடம் கூறி கடத்த கேட்டுள்ளார்.இவர்கள் மூவரும் செப்டம்பர் 20ல் நாகராபாவி ஸ்வாதி ஓட்டல் அருகில் அபய் ரவீந்திராவை கடத்தினர். பின் அவரின் குடும்பத்தினருக்கு போன் செய்து, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் தேடுவதை அறிந்து, அபய் ரவீந்திராவை விடுவித்து கடத்தல்காரர்கள் தப்பினர். கடத்தல்காரர்களை போலீசார் தேடி வந்த நிலையில் அருண், சஞ்சய், அசோக் நரேஷ் உள்பட 12 பேரை அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X