பொது செய்தி

இந்தியா

நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்'மருத்துவ பரிசோதனை ஆண்டுவிழா'

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு-நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டு தோறும் திருமண ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு பதில், 'மருத்துவ பரிசோதனை ஆண்டுவிழா' கொண்டாடினால், மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்," என, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் அறிவுறுத்தினார்.பெங்களூரு மாநகராட்சி, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை ஒருங்கிணைப்பில், பாபு ஜெகஜீவன்ராம்

பெங்களூரு-நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டு தோறும் திருமண ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு பதில், 'மருத்துவ பரிசோதனை ஆண்டுவிழா' கொண்டாடினால், மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்," என, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் அறிவுறுத்தினார்.பெங்களூரு மாநகராட்சி, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை ஒருங்கிணைப்பில், பாபு ஜெகஜீவன்ராம் மருத்துவமனையில், உலக இருதய தினம் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று நடந்த நிகழ்ச்சியில், மஞ்சுநாத் பேசியதாவது:மாரடைப்பு கடந்த 1960ல், இறந்தவர்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள், 3 சதவீதமாக இருந்தனர். தற்போது காற்று மாசடைவது, நவீன பழக்கவழக்கங்களால், இந்த அளவு 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன் பணக்காரர்களுக்கு மட்டுமே, மாரடைப்பு ஏற்படும் என, கூறப்பட்டது. ஆனால் இப்போது அனைத்து மக்களுக்கும் வருகிறது.குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில், 51 சதவீதம் பேருக்கு மாரடைப்பு அதிகரிக்கிறது. எனவே இளம் தலைமுறையினர், புகை பிடிப்பது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை, உடனடியாக நிறுத்த வேண்டும்.சமீபத்தில் எங்கள் மருத்துவமனை, ஒரு ஆய்வை நடத்தியது. லாரி, பஸ், ஆட்டோ ஓட்டுனர்கள் பலரும், மாரடைப்புக்கு ஆளாவது ஆய்வில் தெரிந்தது. இதற்கு முக்கிய காரணம் காற்று மாசடைவது. தற்போது மாசு என்பது, மற்றொரு புகையிலை பொருளாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த உழைக்க வேண்டும்.ஒரே இடத்தில், தொடர்ந்து நான்கு மணி நேரம் அமர்ந்திருப்பது, ஒரு சிகரெட்டை புகைத்ததற்கு சமம். எனவே, உடலை வருத்தி, உழைத்து சாப்பிட வேண்டும். உடலை வருத்தி உழைத்தால், மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்.உடற்பயிற்சி ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பது, இடுப்பின் சுற்றளவு அதிகரிப்பதை, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், அளவுக்கு அதிகமான ஆசையை விட வேண்டும். இதனால் இருதயத்தை காப்பாற்றலாம்.இதயத்தின் இடது புறம் அல்லது இருதயத்தின் பக்கத்தில் வலி இருந்தால், மாரடைப்பின் அறிகுறி என, கருதப்பட்டது. இப்போது வயிற்றின் மேற்பகுதியில், வலி ஏற்படுவது, வாந்தியெடுப்பது, தாடையில் வலி, முதுகு வலியும் கூட, மாரடைப்பின் அடையாளமாக உள்ளது. இவை பற்றி அலட்சியம் செய்யாமல், ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டும்.தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு பயிற்சி ஏற்படும் வகையில், பணியாற்ற வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டு தோறும் திருமண ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு பதில், மருத்துவ பரிசோதனை ஆண்டு விழா கொண்டாடினால், மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X