பொது செய்தி

இந்தியா

பெங்களூரு - ஹம்பி -- துங்கபத்ரா அணைக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா சலுகை

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரு - ஹம்பி -- துங்கபத்ரா அணைக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா சலுகை அறிவித்துள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:பயணியர் வசதிக்காக, பெங்களூரு - ஹம்பி -- துங்கபத்ரா அணை இடையே, துாங்கும் வசதி கொண்ட சொகுசு பஸ் இயக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல், சுற்றுலா துவங்குகிறது. இந்த பஸ்சில் காலை சிற்றுண்டி, மதிய, இரவு உணவு வழங்கப்படும்.ஹம்பியை சுற்றி

பெங்களூரு-பெங்களூரு - ஹம்பி -- துங்கபத்ரா அணைக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா சலுகை அறிவித்துள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:பயணியர் வசதிக்காக, பெங்களூரு - ஹம்பி -- துங்கபத்ரா அணை இடையே, துாங்கும் வசதி கொண்ட சொகுசு பஸ் இயக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல், சுற்றுலா துவங்குகிறது. இந்த பஸ்சில் காலை சிற்றுண்டி, மதிய, இரவு உணவு வழங்கப்படும்.ஹம்பியை சுற்றி பார்ப்பதற்கான, நுழைவு கட்டணத்தையும், கே.எஸ்.ஆர்.டி.சி., ஏற்கும். பெரியவர்களுக்கு 2,500 ரூபாய், சிறியவர்களுக்கு 2,300 டிக்கெட் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஜயவிட்டல கோவில், விருபாக்ஷா சுவாமி கோவில், விநாயகர், லட்சுமி நரசிம்மர், படவலிங்கம், குளங்கள், கமலமஹால், மஹாராணியரின் நீச்சல் குளம் உட்பட, அனைத்து இடங்களையும் பார்க்கலாம்.அதேபோல, கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த, பெங்களூரு -- ஷிரடி இடையே, அம்பாரி ட்ரீம் கிளாஸ் பஸ் போக்குவரத்தும், அக்டோபர் 6 முதல் துவங்கப்படுகிறது. இதற்கான பயண கட்டணம், 1,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X