பொது செய்தி

இந்தியா

கிராம பஞ்சாயத்திலேயே, பி.டி.ஒ., எனும் கிராம பஞ்சாயத்து அபிவிருத்தி அதிகாரிகள் குடும்பத்துடன் வசிக்க வேண்டும்

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு-கிராம பஞ்சாயத்திலேயே, பி.டி.ஒ., எனும் கிராம பஞ்சாயத்து அபிவிருத்தி அதிகாரிகள் குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்பதை, கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பி.டி.ஒ.,க்கள் வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெங்களூரு ரூரல் மாவட்ட கிராமப்புறங்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாக சென்றடைவதில்லை. கிராமப்புற மக்களுக்கு தேவையான

பெங்களூரு-கிராம பஞ்சாயத்திலேயே, பி.டி.ஒ., எனும் கிராம பஞ்சாயத்து அபிவிருத்தி அதிகாரிகள் குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்பதை, கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பி.டி.ஒ.,க்கள் வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெங்களூரு ரூரல் மாவட்ட கிராமப்புறங்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாக சென்றடைவதில்லை. கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்டங்கள், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில், பி.டி.ஒ.,க்கள், அந்த பகுதியிலேயே வசிக்க வேண்டும் என, கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை உத்தரவிட்டுள்ளது.கிராம அபிவிருத்தித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிராமங்களில் நவீன வசதிகள் இல்லை என்பதால், பெரும்பாலான பி.டி.ஒ.,க்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ள இடங்களில் வசிக்காமல், நகர்ப்பகுதிகள் அல்லது தங்களின் சொந்த ஊர்களிலேயே வசிக்கின்றனர்; அங்கிருந்தே தினமும், அலுவலகம் வந்து செல்கின்றனர்.இவர்களின் பயணத்துக்கே, அதிக நேரம் செலவிடுகின்றனர். பணிகள் தொடர்பாக, கிராமத்தினர் சந்திக்க சென்றால், பி.டி.ஒ.,க்கள் இருப்பதிலை. பலமுறை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அலுவலகம் வராமல், வீடு திரும்புகின்றனர். இவர்களை சந்திக்க, மக்கள் அலைபாயும் நிலை உள்ளது. இது குறித்து புகார்கள் வந்துள்ளது. அரசின் திட்டங்கள், சலுகைகள் மக்களுக்கு கிடைப்பதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், இனி பி.டி.ஒ.,க்கள், கிராம பஞ்சாயத்து மத்திய இடங்களில் வசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கெடுபிடி உத்தரவால், சொந்த ஊர்களில் வசித்த பி.டி.ஒ.,க்கள், தங்கள் பணியிடங்களில் வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X