போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை, டோயிங் எனப்படும் இழுத்துச் செல்லும் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை, 'டோயிங்' எனப்படும் இழுத்துச் செல்லும் நடவடிக்கை

Added : செப் 30, 2021
Share
மைசூரு-போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை, 'டோயிங்' எனப்படும் இழுத்துச் செல்லும் நடவடிக்கையை, மைசூரு நகர போக்குவரத்து போலீசார் மீண்டும் துவங்கியுள்ளனர்.அபராதம் மைசூரு நகர போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை மீறும், இருசக்கர வாகனங்களை டோயிங் செய்வதற்காக, 'டைகர்' என்ற பெயரில், டோயிங் வாகனத்தை இயக்கி வந்தனர்.பார்க்கிங் அல்லாத இடங்களில்

மைசூரு-போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை, 'டோயிங்' எனப்படும் இழுத்துச் செல்லும் நடவடிக்கையை, மைசூரு நகர போக்குவரத்து போலீசார் மீண்டும் துவங்கியுள்ளனர்.அபராதம் மைசூரு நகர போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை மீறும், இருசக்கர வாகனங்களை டோயிங் செய்வதற்காக, 'டைகர்' என்ற பெயரில், டோயிங் வாகனத்தை இயக்கி வந்தனர்.பார்க்கிங் அல்லாத இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் சக்கரங்களை 'லாக்' செய்து, அதே இடத்தில் அபராதம் விதிப்பர். உரிமையாளர் அங்கில்லை என்றால், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வர்.வாகனம் நிறுத்திய இடங்களில், 'மைக்'கில் அறிவிக்காமல், 'வீடியோ'வில் பதிவு செய்யாமல், அதே இடத்தில் அபராதம் செலுத்த வாய்ப்பளிக்காமல், வாகனங்களை கொண்டு செல்வதாக, புகார் வந்தது.எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், டோயிங் நடவடிக்கையை நிறுத்தியிருந்தனர். தற்போது போக்குவரத்து விதிகளை மீறுவோர் அதிகரிக்கின்றனர்.எனவே 'டைகர்' டோயிங் வாகனத்தை சாலையில் இறக்க, மைசூரு போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த வாகனம், நகர் முழுவதும் சுற்றி வந்து, 'நோ பார்க்கிங்' இடங்கள், போக்குவரத்து நெருக்கடியுள்ள பகுதிகளில், நிறுத்தப்பட்ட வாகனங்களை கொண்டு செல்வர்.குற்றம் மற்றும் போக்குவரத்து டி.சி.பி., கீதா பிரசன்னா கூறியதாவது:மைசூரில் தவறான இடங்களில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பிரச்னை ஏற்படுகிறது.எனவே, டோயிங் வாகனத்தை, மீண்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் 'டைகர்' வாகனம், சாலையில் இறங்கும். இரு சக்கர வாகனத்தை கொண்டு செல்லும். 4 சக்கர வாகனங்களின் சக்கரங்கள் லாக் செய்யப்படும்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நோ பார்க்கிங்கில் நின்றுள்ள இரு சக்கர வாகனங்களுக்கு, 1,000 ரூபாயுடன், கூடுதலாக டோயிங் கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X