பொது செய்தி

இந்தியா

'ஹெலி டூரிசம்'இந்த ஆண்டும் இல்லை

Added : செப் 30, 2021
Share
Advertisement
மைசூரு-தசரா நேரத்தில் சுற்றுலா பயணியருக்கு, ஹெலிகாப்டரில் பறந்து முக்கிய இடங்களை பார்க்கும் வாய்ப்பு, இந்த ஆண்டும் கிடைக்காது.ஆண்டு தோறும், உலகப்புகழ் பெற்ற தசராவை கண்டு ரசிக்க, உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர், மைசூருக்கு வருகை தருவது வழக்கம். இவர்களின் வசதிக்காக, சுற்றுலாத்துறை, 2016ல் முதன் முறையாக, 'ஆகாயத்திலிருந்து மைசூரு' என்ற

மைசூரு-தசரா நேரத்தில் சுற்றுலா பயணியருக்கு, ஹெலிகாப்டரில் பறந்து முக்கிய இடங்களை பார்க்கும் வாய்ப்பு, இந்த ஆண்டும் கிடைக்காது.ஆண்டு தோறும், உலகப்புகழ் பெற்ற தசராவை கண்டு ரசிக்க, உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர், மைசூருக்கு வருகை தருவது வழக்கம். இவர்களின் வசதிக்காக, சுற்றுலாத்துறை, 2016ல் முதன் முறையாக, 'ஆகாயத்திலிருந்து மைசூரு' என்ற பெயரில், 'ஹெலி டூரிசம்' வசதியை அறிமுகம் செய்தது.தசரா நடக்கும் போது, லலித மஹால் ஹெலிபேடிலிருந்து, ஹெலிகாப்டர் மூலம், மைசூரு நகர், அரண்மனை, சாமுண்டி மலை, குக்கரஹள்ளி ஏரி, கிராபர்டு ஹால்.ரயில் நிலையம், ஜெகன் மோகன் அரண்மனை, காரஞ்சி ஏரி, பொருட்காட்சி மைதானம், மானச கங்கோத்ரி கேம்பஸ் உட்பட, பல இடங்களை பார்க்கலாம்.இந்த வசதிக்கு, சுற்றுலா பயணியரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் 2020ல் கொரோனாவால், ஹெலி டூரிசம் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டும் கூட, ஹெலி டூரிசம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், தனியார் ஹெலிகாப்டர் நிறுவனங்கள், குடகு, கபினி, பண்டிப்பூரில் ஹெலிகாப்டர் டூரிசத்தை தொடர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X