சாக்கடை நீர் கலந்த குடிநீரை பருகியதால இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கலபுரகி-சாக்கடை நீர் கலந்த குடிநீரை பருகியதால் ஏற்பட்ட வாந்தி பேதியால், இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம், கலபுரகியின் தஸ்தாபுரா கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.கலபுரகி மாவட்டம், கமலாபுரா தாலுகா, தஸ்தாபுரா கிராமத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்துள்ளதாக அப்பகுதியினர் ஆதாரத்துடன் அதிகாரிகளுக்கு

கலபுரகி-சாக்கடை நீர் கலந்த குடிநீரை பருகியதால் ஏற்பட்ட வாந்தி பேதியால், இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம், கலபுரகியின் தஸ்தாபுரா கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.கலபுரகி மாவட்டம், கமலாபுரா தாலுகா, தஸ்தாபுரா கிராமத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்துள்ளதாக அப்பகுதியினர் ஆதாரத்துடன் அதிகாரிகளுக்கு காண்பித்துள்ளனர்.ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கிராமத்தினர் அனைவரும் சாக்கடை நீர் கலந்த குடிநீரையே பருகியுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிநீர் பருகிய, 44 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் திரவுபதி சிவராயா, 60, கமலாபாய், 46, ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.மற்ற, 42 பேர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றன.கிராமத்தினர் தகவல்படி காலரா பரவும் அபாயம் உள்ளதாக கவலை வெளிப்படுத்தியுள்ளனர். தகவலறிந்த சுகாதார துறை அதிகாரிகள், கிராமத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X