நேரு காலத்தில் இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஹாசன்-"நேரு காலத்தில் இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை. மானம், மரியாதை இருந்தால், காங்கிரசை மூடி, புதிய காங்கிரஸ் அமையுங்கள்," என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில், அவர் நேற்று கூறியதாவது:மதவாத கட்சியுடன் செல்ல மாட்டோம் என கூறி, மாண்டியாவில் குமாரசாமியின் மகனை, காங்கிரசார் தோற்கடித்தனர். துமகூரில் மதவாத கட்சியுடன் சேர்ந்து, தேவகவுடாவை

ஹாசன்-"நேரு காலத்தில் இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை. மானம், மரியாதை இருந்தால், காங்கிரசை மூடி, புதிய காங்கிரஸ் அமையுங்கள்," என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில், அவர் நேற்று கூறியதாவது:மதவாத கட்சியுடன் செல்ல மாட்டோம் என கூறி, மாண்டியாவில் குமாரசாமியின் மகனை, காங்கிரசார் தோற்கடித்தனர். துமகூரில் மதவாத கட்சியுடன் சேர்ந்து, தேவகவுடாவை தோற்கடித்தனர்.மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரசார் எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு கொண்டு வந்தனர்... இவர்கள் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களையே தோற்கடித்தனர். 2023 தேர்தலிலும் இதைத்தான் செய்வர்.மதவாத கட்சியை எதிர்ப்பவர்கள், அக்கட்சியில் ஏன் சேர்கின்றனர். மாநில கட்சி மற்றும் மதவாத கட்சியின் கதவை தட்டுகின்றனர்... காங்கிரசுக்கு இத்தகைய சூழ்நிலை வந்துவிட்டதே, என்ற வருத்தம் எனக்கும் உள்ளது.நேரு காலத்தில் இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை. மானம், மரியாதை இருந்தால், காங்கிரசை இழுத்து மூடி, புதிய காங்கிரஸ் அமையுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X