போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டு பிரஜை கைது| Dinamalar

போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டு பிரஜை கைது

Added : செப் 30, 2021
Share
பெங்களூரு-பெங்களூரில் தொழிலதிபர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டு பிரஜையை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரில் பிசினஸ் மேன், கல்லுாரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்வதாக கே.ஜி ஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த உறுதியான தகவலின்

பெங்களூரு-பெங்களூரில் தொழிலதிபர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டு பிரஜையை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரில் பிசினஸ் மேன், கல்லுாரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்வதாக கே.ஜி ஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த உறுதியான தகவலின் படி எச்.பி.ஆர். லே - அவுட்டில் உள்ள பி.டி.ஏ., காம்ப்ளக்சில் புதன்கிழமை சோதனை நடத்தனர். அப்போது போதை பொருளுடன் இருந்த நைஜீரியா நாட்டு பிரஜையை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹாசிஷ் ஆயில், எம்.டி.எம்.ஏ., போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனன. கைது செய்யப்பட்டவர் பெயர் சக்வீம் மால்வின், 30.இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் துணை நடிகர், சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். மெடிக்கல் விசாவில் பெங்களூரு வந்த இவர் மும்பையில் உள்ள நியூயார்க் பிலிம் சிட்டியில் படித்துள்ளார்.நைஜீரியாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து போதை பொருட்களை வரவழைத்து, பெங்களூரில் விற்பனை செய்து வந்துள்ளார்.இவர் தமிழில் சிங்கம் படத்தில் போதை பொருள் கடத்தல்காரராகவே நடித்திருப்பார். சினிமாவில் மட்டும் அல்லாது நிஜத்திலும் அவர் போதை பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X