மாமியார், மனைவி, நாத்தனார் மூவரையும் இளைஞர் கொடூரமாக தாக்கி கொலை

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராய்ச்சூர்-மனைவியுடன் குடும்ப தகராறு காரணமாக, மாமியார், மனைவி, நாத்தனார் மூவரையும் இளைஞர் கொடூரமாக தாக்கி கொலை செய்தது, ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராய்ச்சூர் புறநகரில் உள்ள யரமரஸ் மையத்தை சேர்ந்தவர் சந்தோஷி, 45. இவருக்கு, வைஷ்ணவி, 25, ஆரத்தி, 16, என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.திருமணம் ஆறு மாதங்களுக்கு முன், வைஷ்ணவியை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை

ராய்ச்சூர்-மனைவியுடன் குடும்ப தகராறு காரணமாக, மாமியார், மனைவி, நாத்தனார் மூவரையும் இளைஞர் கொடூரமாக தாக்கி கொலை செய்தது, ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராய்ச்சூர் புறநகரில் உள்ள யரமரஸ் மையத்தை சேர்ந்தவர் சந்தோஷி, 45. இவருக்கு, வைஷ்ணவி, 25, ஆரத்தி, 16, என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.திருமணம் ஆறு மாதங்களுக்கு முன், வைஷ்ணவியை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த சாய், 28, என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.திருமணமான ஆரம்பத்தில் கணவன், மனைவி இருவரும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தனர். பின், அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். இதனால் கணவரிடம் பிரிந்து, தாய் வீட்டுக்கு மனைவி வந்து விட்டார்.ஆத்திரமடைந்த கணவர், நேற்று முன்தினம் இரவு மனைவி வீட்டுக்கு வந்தார். நள்ளிரவில் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதால், மறைத்து வைத்திருந்த கத்தியால், மாமியார், மனைவி, நாத்தனார் மூவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்து மூவரும் உயிரிழந்தனர். பின் அவர் தப்பியோடிவிட்டார்.நேற்று காலை விடிந்ததும் அப்பகுதியினர், சந்தோஷியின் வீட்டு கதவு திறந்திருந்தையும், ஆங்காங்கே ரத்தம் இருப்பதை கண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.அப்போது, மூன்று பேர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ராய்ச்சூர் ரூரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கூடுதல் எஸ்.பி., ஸ்ரீஹரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வந்து, கை ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய், சிறிது துாரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. ஒரே குடும்பத்தில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், ராய்ச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X