பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு இல்லாததால் புதரானது செம்பரம்பாக்கம் கிளை கால்வாய்

Added : செப் 30, 2021
Share
Advertisement
குன்றத்துார்--செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, கொளப்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் கிளை கால்வாய், செடி, கொடிகள் வளர்ந்து, புதராக மாறிஉள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின், நான்காம் மதகில் இருந்து, கோவூர், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கொளப்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றுக்கு கிளை கால்வாய் ஒன்று செல்கிறது.இப்பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தபோது, ஏரியில் இருந்து

குன்றத்துார்--செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, கொளப்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் கிளை கால்வாய், செடி, கொடிகள் வளர்ந்து, புதராக மாறிஉள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின், நான்காம் மதகில் இருந்து, கோவூர், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், கொளப்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றுக்கு கிளை கால்வாய் ஒன்று செல்கிறது.இப்பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தபோது, ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், இதன் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.காலப்போக்கில், விவசாயம் குறைந்ததால், இக்கால்வாயை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால், கழிவு நீர் கலக்கும் பகுதியாக மாறிவிட்டது.அதே நேரத்தில், மழைகாலத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர், இதன் வழியாக ஆற்றுக்கு செல்கிறது.இதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டதால், செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறிஉள்ளது. கால்வாய் ஒன்று இருப்பதே தெரியவில்லை.எனவே, செம்பரம்பாக்கம் கிளை கால்வாயை துார் வாரி, முறையாக பராமரிக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X