பொழிச்சலுார் சுடுகாடில் குப்பை எரிப்பதால் அவதி

Added : செப் 30, 2021
Share
Advertisement
பொழிச்சலுார்--பொழிச்சலுார் ஊராட்சியில், சுடுகாட்டில் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுவட்டார பகுதி மக்கள், புகை மூட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், புனிததோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியது, பொழிச்சலுார் ஊராட்சி. இங்கு, 15 வார்டுகள் உள்ளன. தினமும், 6 டன் குப்பை சேகரமாகிறது.இவ்வூராட்சியில் குப்பை கொட்டுவதற்கு போதிய இடவசதி

பொழிச்சலுார்--பொழிச்சலுார் ஊராட்சியில், சுடுகாட்டில் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுவட்டார பகுதி மக்கள், புகை மூட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், புனிததோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியது, பொழிச்சலுார் ஊராட்சி. இங்கு, 15 வார்டுகள் உள்ளன. தினமும், 6 டன் குப்பை சேகரமாகிறது.இவ்வூராட்சியில் குப்பை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை.இதனால், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள சுடுகாட்டில் கொட்டி, தரம் பிரித்து, சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள கொளப்பாக்கத்திற்கு எடுத்து சென்றனர்.சமீபகாலமாக, சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பையை முறையாக கையாளுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இதனால், சுடுகாடு முழுதும் குவியல் குவியலாக, குப்பை மேடு காணப்படுகிறது. மேலும், குப்பையை அடிக்கடி தீயிட்டு எரிக்கின்றனர். அதுபோன்ற நேரத்தில், புகை மூட்டம் அதிகளவில் வெளியேறி, சுற்றிஉள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், மக்கள் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர்.எனவே, இப்பிரச்னையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு, சுடுகாட்டில் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X