முக்கிய பகுதியில் மோசமான சாலை| Dinamalar

முக்கிய பகுதியில் மோசமான சாலை

Added : செப் 30, 2021
Share
பம்மலை அடுத்த கவுல்பஜாரில் இருந்து, அடையாறு ஆற்றை கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என தினசரி, ஆயிரக்கணக்கானோர் இப்பாதையில் பயணிக்கின்றனர். இவ்வளவு முக்கியமான மேம்பாலத்தில், கவுல்பஜாருக்கு இறங்கும் இடத்தில், சாலை குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. பல மீட்டர் துாரத்திற்கு

பம்மலை அடுத்த கவுல்பஜாரில் இருந்து, அடையாறு ஆற்றை கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என தினசரி, ஆயிரக்கணக்கானோர் இப்பாதையில் பயணிக்கின்றனர். இவ்வளவு முக்கியமான மேம்பாலத்தில், கவுல்பஜாருக்கு இறங்கும் இடத்தில், சாலை குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. பல மீட்டர் துாரத்திற்கு 'மெகா சைஸ்' பள்ளங்களாக உள்ளன.இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.இரவில், பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து அடிபடுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X