பணியிடம் நிரப்பப்படாததால் புகார் மீதான நடவடிக்கையில் தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணியிடம் நிரப்பப்படாததால் புகார் மீதான நடவடிக்கையில் தாமதம்

Added : செப் 30, 2021
Share
குரோம்பேட்டை--பல்லாவரம் நகராட்சியில், உதவி பொறியாளர், பணி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. ஆயிரத்து, 565 தெருக்கள் உள்ளன. இங்கு, மூன்று லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்நகராட்சியில், குடிநீர், சாலை, மின் விளக்கு, பாதாள சாக்கடை

குரோம்பேட்டை--பல்லாவரம் நகராட்சியில், உதவி பொறியாளர், பணி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. ஆயிரத்து, 565 தெருக்கள் உள்ளன. இங்கு, மூன்று லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்நகராட்சியில், குடிநீர், சாலை, மின் விளக்கு, பாதாள சாக்கடை தொடர்பாக, நாள்தோறும் ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன.அவற்றை பொறியியல் பிரிவினர் ஆய்வு செய்து, நிவர்த்தி செய்வது வழக்கம்.இந்நகராட்சியில், ஒரு பொறியாளர், இரண்டு உதவி பொறியாளர்கள், ஒரு பணி ஆய்வாளர் பணிஇடங்கள் உள்ளன. தற்போது, பொறியாளர் மற்றும் ஒரு உதவி பொறியாளர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும் ஒரு உதவி பொறியாளர் மற்றும் பணி ஆய்வாளர் பணியிடம், மூன்று மாதங்களாக காலியாக உள்ளது. இதனால், புகார்களை உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகள் இணைக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X