சமூக விரோதிகளின் கூடாரமான மாநகராட்சி விளையாட்டு திடல்| Dinamalar

சமூக விரோதிகளின் கூடாரமான மாநகராட்சி விளையாட்டு திடல்

Added : செப் 30, 2021
Share
தி.நகர்-முறையான பராமரிப்பு இல்லாத மாநகராட்சி விளையாட்டு திடல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர் 136வது வார்டு வெங்கட் நாராயணா சாலையில், மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியோர் வரை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், விளையாட்டு திடல் அலங்கோலமாக

தி.நகர்-முறையான பராமரிப்பு இல்லாத மாநகராட்சி விளையாட்டு திடல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர் 136வது வார்டு வெங்கட் நாராயணா சாலையில், மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியோர் வரை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், விளையாட்டு திடல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. ஒரு பகுதியில் கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் குப்பை கழிவுகள் எரிக்கப்படுகின்றன.அது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் விளையாட்டு திடல் நடைபாதை, சமூக விரோதிகளின் திறந்தவெளி 'குடி' மையமாக மாறுகிறது. போதையேறிய 'குடி' மகன்கள் மது பாட்டில்களை ஆங்காங்கே போட்டு செல்கின்றனர்.இளைஞர்களின் உடல்நலத்தை காக்க வேண்டிய விளையாட்டு திடல், அவர்களது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 'குடி' மையமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.சென்னையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் துறையும், விளையாட்டு திடலை முறையாக பராமரிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும், இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X