பொது செய்தி

தமிழ்நாடு

காண்போரை கவர்ந்திழுக்கிறது பசுமை சென்னை சுவரோவியம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மேற்கு சைதாப்பேட்டை--சென்னையை பசுமை மாநகரமாக்கும் திட்டத்தில், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறித்து வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.'சிங்கார சென்னை -- 2.0' திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களில், நன்கொடையாளர்கள் உதவியுடன் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு

மேற்கு சைதாப்பேட்டை--சென்னையை பசுமை மாநகரமாக்கும் திட்டத்தில், மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறித்து வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.'சிங்கார சென்னை -- 2.0' திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களில், நன்கொடையாளர்கள் உதவியுடன் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, மேற்கு சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள 142வது வார்டு அலுவலக சுற்றுச்சுவரில், பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.இதில், விலங்குகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பதால் சுற்றுச்சூழல், வருமானம் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பயன்களை விளக்கும் ஓவியங்கள், மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.அதேபோல் பிற இடங்களிலும் தொடர்ந்து ஓவியங்கள் வரைய, நன்கொடையாளர்கள் கிடைக்காததால், மாநகராட்சி அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.மேலும், சுவரோவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.இது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையுமா என்பது சந்தேகம். வரும் நாட்களில் வரையப்படும் ஓவியங்களில் தமிழில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுத வேண்டும் என்பதே, பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X