விருப்பமில்லா திருமணம் புதுப்பெண் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருப்பமில்லா திருமணம் புதுப்பெண் தற்கொலை

Added : செப் 30, 2021
Share
அரும்பாக்கம்-திருமணத்தில் விருப்பமில்லாததால், புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் திவ்யா பாரதி, 23. இவருக்கும், வளசரவாக்கத்தைச் சேர்ந்த, விஸ்வநாத், 27, என்பவருக்கும், கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது.ஆனால், திருமணத்தில் விரும்பம் இல்லாத திவ்யா, அடுத்த நாளே எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு

அரும்பாக்கம்-திருமணத்தில் விருப்பமில்லாததால், புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் திவ்யா பாரதி, 23. இவருக்கும், வளசரவாக்கத்தைச் சேர்ந்த, விஸ்வநாத், 27, என்பவருக்கும், கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது.ஆனால், திருமணத்தில் விரும்பம் இல்லாத திவ்யா, அடுத்த நாளே எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.தொடர்ந்து மன உளைச்சலில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X