பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசல் 'சிக்னல்' அமைக்க கோரிக்கை

Added : செப் 30, 2021
Share
Advertisement
வளசரவாக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் சிக்னல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.போரூர் -- கோடம்பாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை உள்ளது. அதேபோல், மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் வளசரவாக்கம், ஆற்காடு சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக ஆலப்பாக்கம் பிரதான சாலை உள்ளது.இந்த இரு சாலைகளிலும், ஆயிரக்கணக்கான

வளசரவாக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் சிக்னல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.போரூர் -- கோடம்பாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை உள்ளது. அதேபோல், மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் வளசரவாக்கம், ஆற்காடு சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக ஆலப்பாக்கம் பிரதான சாலை உள்ளது.இந்த இரு சாலைகளிலும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் ஆலப்பாக்கம் பிரதான சாலை சந்திப்பில் 'சிக்னல் இல்லாத காரணத்தால் 'பீக் ஹவர்' வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், இப்பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், கோயம்பேடு -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் ரேஷன் கடை மற்றும் நெற்குன்றம் வெங்கடேச பெருமாள் கோவில் அருகேயும் சிக்னல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.இதையடுத்து, இப்பகுதிகளில் சிக்னல் அமைக்க கோரி, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனரை சந்தித்து, நேற்று மனு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X