பொது செய்தி

தமிழ்நாடு

ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க மக்கள் வேண்டுகோள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
அம்பத்துார்--பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள மரம், செடி, குப்பையால் விஷப்பூச்சிகள் அதிகரிப்பதால், அவ்விடத்தில் பூங்கா அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம், 86வது வார்டு வார்டு அத்திப்பட்டு ஐ.சி.எப்., காலனி அருகே, சீனிவாசா காலனி கிருஷ்ணா தெருவில் வீட்டு மனைப்பிரிவு அமைத்த போது,

அம்பத்துார்--பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள மரம், செடி, குப்பையால் விஷப்பூச்சிகள் அதிகரிப்பதால், அவ்விடத்தில் பூங்கா அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம், 86வது வார்டு வார்டு அத்திப்பட்டு ஐ.சி.எப்., காலனி அருகே, சீனிவாசா காலனி கிருஷ்ணா தெருவில் வீட்டு மனைப்பிரிவு அமைத்த போது, பூங்காவிற்கென 6,000 சதுர அடி பரப்பளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டடதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்காததால் மரம், செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், குப்பைக் கழிவுகளும் குவிந்துள்ளன.இதனால், அந்த இடத்தில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளுடன், நோய் தொற்று பரப்பும் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இரவிலும், மழை நேரத்திலும் அங்கிருந்து வெளியேறும் விஷப்பூச்சிகள், அங்குள்ள வீடுகளுக்குச் செல்வதால், மக்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். மேலும், குப்பைக் கழிவால் உண்டாகும் துர்நாற்றம், கொசுத்தொல்லையால், வீடுகளின் ஜன்னல்களை திறக்க முடியாத நிலை உள்ளது.இது குறித்து, மாநகராட்சியில் புகார் செய்தாலும், அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்தி வைப்பதால், பலர் அதன் மறைவிடத்தை பொது கழிப்பிடமாக மாற்றி விடுகின்றனர். கஞ்சா புகைப்பது உள்ளிட்ட போதை பழக்கத்திற்காகவும், சிலர் அங்கு வந்து செல்கின்றனர். மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, இந்த இடத்தில் பூங்கா அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என, பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X