பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீருடன் ஏரியில் பாயும் மழை நீர்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கொரட்டூர--பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் மழை நீரை ஏரிக்குள் செலுத்தும் போது, கழிவு நீரை தடுப்பதற்காக திட்டமிடப்பட்ட, 'ரெகுலேட்டர்' வசதிக்கான பணி எப்போது துவங்கும் என, நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை அம்பத்துார் மண்டலத்தின் கொரட்டூர் பகுதியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 590 ஏக்கர் ஏரி, நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக உதவுகிறது. கோரிக்கைஆனால்,

கொரட்டூர--பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் மழை நீரை ஏரிக்குள் செலுத்தும் போது, கழிவு நீரை தடுப்பதற்காக திட்டமிடப்பட்ட, 'ரெகுலேட்டர்' வசதிக்கான பணி எப்போது துவங்கும் என, நீர்நிலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை அம்பத்துார் மண்டலத்தின் கொரட்டூர் பகுதியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 590 ஏக்கர் ஏரி, நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக உதவுகிறது. கோரிக்கைஆனால், கடந்த பல ஆண்டுகளாக பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து, ஏரியில் பாய்ந்ததால் ஏரி நீர் மாசடைந்தது. இதையடுத்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து, 2016ம் ஆண்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பலத்த மழையின் போது ஏரியின் கரைகள் உடைக்கப்பட்டு, மழை நீரை விடுவதாக கூறும் மாநகராட்சி நிர்வாகம், கழிவு நீரையும் கலந்து விடுவது தொடர்கிறது. ஏரி துார் வாரப்படாமல் உள்ளதால், அதில் தங்கிவிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக, கிடைக்கிற மழை நீரும் எளிதில் வெளியேறி, ஏரி வறட்சிக்கு உள்ளாகி விடுகிறது.ஏரியைத் துார் வார வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்களும், பொதுமக்களும், அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், பலத்த மழைக் காலத்தில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியின்றி, மாநகராட்சி நிர்வாகம் கரையை உடைப்பதை தவிர்க்கும் வகையில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் ரெகுலேட்டர் தடுப்பு வசதி அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, கருக்கு டி.டி.பி., காலனி ஒண்டி வீரன் கோவில் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிரதான மழை நீர் வடிகால் பகுதிகளில் ரெகுலேட்டர்கள் அமைக்கப்படும் என, பொதுப்பணித் துறையின் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கைமேலும், அதற்கான கட்டுமான பணி செப்டம்பரில் துவங்கி, பருவ மழைக்கு முன் முடிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை பணி துவங்கப்படவில்லை.ரெகுலேட்டர் அமைக்கப்பட்டால், மாநகராட்சியினர் அதிரடியாக கரையை உடைக்க முடியாது. ரெகுலேட்டரை திறக்க பொதுப்பணித் துறையின் அனுமதியை பெற வேண்டும். மழை நீர் வரத்து ஓய்ந்ததும், ரெகுலேட்டர் கதவுகளை பொதுப்பணித் துறை மூடிவிடும். இதனால், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஏரிக்குள் பாயாமல் தடுக்கப்படும்.விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க இருப்பதால், மழை நீர் வடிகால் துார் வாருதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிருப்திஆனால், பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு தீர்வு காண, பொதுப்பணித் துறை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால், கொரட்டூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் கூறுகையில், 'ஏரியின் பாதுகாப்பு குறித்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பொதுப்பணித் துறையும், மாநகராட்சியும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றன. 'இதே நிலை தொடர்ந்தால், 'நமக்கு நாமே' என மக்களைத் திரட்டி துார் வாரும் பணியை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X