பஸ் ஓட்டுனர் மீது தாக்கு மாணவர்கள் அட்டூழியம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம்-மாநகர பேருந்து ஓட்டுனரை கல்லால் தாக்கி தப்பிய மாணவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.அண்ணா சதுக்கம் - பெரம்பூர் நோக்கி செல்லும், 'தடம் எண்: 29ஏ' மாநகர பேருந்து, நேற்று மாலை 4:30 மணிக்கு, புரசைவாக்கம் அருகே சென்றது. அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை, உள்ளே வரும்படி பேருந்து ஓட்டுனர் ஓட்டேரியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், 39,

கீழ்ப்பாக்கம்-மாநகர பேருந்து ஓட்டுனரை கல்லால் தாக்கி தப்பிய மாணவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.அண்ணா சதுக்கம் - பெரம்பூர் நோக்கி செல்லும், 'தடம் எண்: 29ஏ' மாநகர பேருந்து, நேற்று மாலை 4:30 மணிக்கு, புரசைவாக்கம் அருகே சென்றது. அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை, உள்ளே வரும்படி பேருந்து ஓட்டுனர் ஓட்டேரியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், 39, தெரிவித்துள்ளார். நடத்துனரும் எச்சரித்துள்ளார்.இதற்கு செவிமடுக்காமல், மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலும், மேற்கூரையிலும் பயணித்ததாக கூறப்படுகிறது. புரசைவாக்கம், தாசப்பிரகாஷ் பேருந்து நிறுத்தம் அருகே, பேருந்து இயக்கத்தை நிறுத்திய ஓட்டுனர், கீழே இறங்கி, மாணவர்களை உள்ளே வர வற்புறுத்திஉள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், சாலையில் இறங்கி கல்லை எடுத்து, ஓட்டுனரின் முதுகில் தாக்கி தப்பினர்.இதில், லேசான காயமடைந்த ஓட்டுனர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், இது குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். இச்சம்பவத்தை கண்டித்து, அவ்வழியாக வந்த பேருந்து ஓட்டுனர்கள், புரசைவாக்கம் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X