சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பலே' திருடன் கைது: 42 சவரன் பறிமுதல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருவான்மியூர்- -திருவான்மியூரில் வீடு புகுந்து திருடியவர் கைது செய்யப்பட்டார். 42 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பெசன்ட் நகர் 30வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஹரி, 72.இவர், கடந்த மாதம், 18ம் தேதி, மயிலாப்பூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று, மறுநாள் வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 42.5 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது

திருவான்மியூர்- -திருவான்மியூரில் வீடு புகுந்து திருடியவர் கைது செய்யப்பட்டார். 42 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பெசன்ட் நகர் 30வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஹரி, 72.இவர், கடந்த மாதம், 18ம் தேதி, மயிலாப்பூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று, மறுநாள் வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 42.5 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரித்தனர்.பழைய குற்றவாளியான, பொன்மாரைச் சேர்ந்த மாணிக்கம், 58, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், 42 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மாணிக்கத்தின் மீது, ஒன்பது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன; மூன்று முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X