சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடில் அரசு பஸ் தீக்கிரை; ஓட்டுனர், பயணியர் உயிர் தப்பினர்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
Advertisement
கோயம்பேடு: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ், கோயம்பேடில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சியிலிருந்து சென்னை நோக்கி, விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சில் ஓட்டுனராக கமலகண்ணன், 40 மற்றும் நடத்துனராக பிரகாசம், 41 ஆகியோர் இருந்தனர்.இன்ஜினில் கரும்புகை நேற்று காலை 10:30

கோயம்பேடு: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ், கோயம்பேடில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி, விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சில் ஓட்டுனராக கமலகண்ணன், 40 மற்றும் நடத்துனராக பிரகாசம், 41 ஆகியோர் இருந்தனர்.


இன்ஜினில் கரும்புகை


நேற்று காலை 10:30 மணியளவில், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே 100 அடி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் இன்ஜினிலிருந்து கரும் புகை வெளியேறியது. அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள், புகை வருவது குறித்து பஸ் ஓட்டுனரை எச்சரித்தனர். இதையடுத்து, ஓட்டுனர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.பயணியர் அவசர, அவசரமாக இறக்கி விடப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களில், பஸ் தீப்பிடித்து எரிய துவங்கியது. காற்றின் வேகத்தில், மளமளவென தீ பஸ் முழுவதும் பரவியது.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு, அசோக் நகர் தீயணைப்பு நிலைய ஊழியர்கள் விரைந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போக்குவரத்து நெரிசல்விபத்தில் பஸ்சின் மேற்பகுதி மற்றும் இருக்கை முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில், முறையான பராமரிப்பின்றி, பஸ்சின் இன்ஜினிலிருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தெரியவந்து உள்ளது.விபத்து காரணமாக, கோயம்பேடு, 100 அடி சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X