பொது செய்தி

தமிழ்நாடு

நில தொகுப்பு திட்டத்தில் சலுகை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நம்பிக்கை

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை-நகர்ப்புற நில தொகுப்பு திட்டத்தில், புது வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி உரிமையாளர்களுக்கு கூடுதல் சலுகை வழங்குவது குறித்த நெறிமுறைகள் அறிய, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர்.நகர்ப்புற பகுதிகளில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது, அரசு துறைகளுக்கு பெரும் சவாலாக

சென்னை-நகர்ப்புற நில தொகுப்பு திட்டத்தில், புது வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி உரிமையாளர்களுக்கு கூடுதல் சலுகை வழங்குவது குறித்த நெறிமுறைகள் அறிய, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர்.நகர்ப்புற பகுதிகளில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது, அரசு துறைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.நிலம் கையகப்படுத்துவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். இதனால் தொடர் பிரச்னைகள் ஏற்படுகின்றன.நாட்டில், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில், நகர்ப்புற நில தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் அனைத்து நிலங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்துவதே இதன் நோக்கம்.இதில், கையகப்படுத்தப்படும் நிலத்தில், 40 சதவீத பகுதிகள் மனைகளாக மேம்படுத்தப்பட்டு, உரிமையாளர்களுக்கே வழங்கப்படும். இதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.இது தொடர்பான நெறிமுறைகளை அறிய, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் குழு குஜராத் மாநிலத்துக்கு சென்றது.அங்கு, ஆமதாபாத் பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகளுடன், இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இத்திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட மனைகளாக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிலத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, கூடுதல் தளபரப்பு அனுமதிப்பதில் சர்வதேச வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.இதனால், நில உரிமையாளர்கள் கூடுதல் பயன் அடைய வாய்ப்பு ஏற்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X