தமிழ்நாடு

சென்ட்ரலில் பூங்கா அமைக்கும் பணி

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால், சென்ட்ரலில் பூங்கா அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதை திறந்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, 380 கோடி ரூபாய் செலவில், 'சென்ட்ரல் சதுக்கம்' கட்டுமான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 'சென்ட்ரல் சதுக்கம்' கட்டும் இடத்தை தவிர, சென்னை மாநகராட்சி
 சென்ட்ரலில் பூங்கா அமைக்கும் பணி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால், சென்ட்ரலில் பூங்கா அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

அடுத்த மாத இறுதிக்குள் இதை திறந்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, 380 கோடி ரூபாய் செலவில், 'சென்ட்ரல் சதுக்கம்' கட்டுமான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 'சென்ட்ரல் சதுக்கம்' கட்டும் இடத்தை தவிர, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை , விக்டோரியா ஹால், எம்.ஜி.ஆர், சென்ட்ரல் மெட்ரோ நிலையம், மூர்மார்க்கெட் ரயில் நிலையம், எம்.ஜி. ஆர்., சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் நிலையங்களுக்கு இடையே, அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வடக்கு பக்கம் உள்ள, காலி இடங்களில் அமைக்கப்படும், இந்த பூங்கா வழியாக, அனைத்து நிலையங்களுக்கும், பயணியர் எளிதாக சென்று, வரும் வகையில், பூங்காவில் தேவையான இடங்களில், நடைபாதைகளும், நிழல் குடைகளும், அமைக்கப்பட உள்ளன. இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. அழகுபடுத்தும் பணிஇப்பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க, மெட்ரோ நிர்வாகம் திட்ட மிட்டு, பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணியர்அமர்ந்து இளைப்பாறு வதற்கு பளிங்குகற்களாலான இருக்கைகளும் கட்டப்பட உள்ளன.பூங்கா அமைக்கும் இத்திட்டத்தில், மாநகராட்சி கட்டடம், விக்டோரியா ஹால் முன்பாக உள்ள காலி இடங்களில், புல் தரைகள், மலர் செடிகள், மற்றும் அழகு சேர்க்கும் செடிகள் நடப்பட்டுள்ளன. நடை பாதைகள் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.

புல் தரையை அழகு படுத்தவும், பூச்செடிகள் வளர்க்கவும், ஆட்கள் நியமிக்கப்பட்டு, பூங்காவை அழகுபடுத்தும் பணி நடக்கிறது. திட்டம்இயந்திரங்கள் வாயிலாக இடம் சமன்படுத்தும் பணி முடிந்து, சிமென்ட் பாலிஸ், கிரானைட் கற்கள் பதிக்கும் பணியுடன், குறிப்பிட்ட இடங்களில், கண்ணாடி சுவர்களும் நிறுவப்பட்டு வருகின்றன.பூங்கா பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, அடுத்த மாத இறுதியில் பயணியர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-அக்-202108:46:05 IST Report Abuse
Lion Drsekar "நடைபாதைகளும், நிழல் குடைகளும், அமைக்கப்பட உள்ளன" நடைபாதைகள் பாராட்டுக்கள் நிழற்குடை சற்று காவல் துறையினர் அவரவர்கள் பகுதியில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று பார்த்தல் தெரியும் பார்க்கவே கண்கூசும் அளவுக்கு பள்ளி பருவத்தில் இருக்கும் இளஞ்சோடிகளின் செயல்பாடுகள் மன வருத்தத்தை உண்டாக்குக்கரியாது, அங்கு நடந்து செல்லும் மூன்றெழுத்து படித்த கூட்டமும் நடை பயிற்சில் இருக்கிறார்கள் அவர்களும் இதை கண்டுகொள்வதில்லை, ஊடகங்களும் வாய் திறக்கவில்லை, தினமலராவது அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் நன்றாக இருக்குக்கும், நல்ல நோக்கில் பல லட்சக் கோடியில் செலவு செய்து அமைக்கப்பட்டு வரும் நிழற்குடையின் அடியில் இப்படி நடப்பது அருவறுக்கத்தக்கது, குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் அண்ணா நகர் போன்ற பூங்காக்களில் எந்த நேரமும் இந்த காட்சிகளைக் காணலாம், அவர்கள் தம்பி உலகத்தில் இருப்பார்கள், யாருக்கும் பயப்படமாட்டார்கள், அதுபோன்று இரயில் நிலையத்தில் அமைக்கப்படும் பூங்காக்களும் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கில் வேண்டிக்கொள்கிரோம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X