சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் பட்டா கத்தியால் 'கேக்' வெட்டியவர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருத்தணி-திருத்தணி அருகே, இளைஞர் ஒருவர் தன் பிறந்த நாளில், பட்டா கத்தியால் 'கேக்' வெட்டி கொண்டாடியதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.திருத்தணி ஒன்றியம், மத்துார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 22. நேற்று முன்தினம், உதயகுமார், தன் பிறந்த நாளையொட்டி, நண்பர்கள் சிலருடன், காலனி அருகே உள்ள சுடுகாடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.அங்கு, வாகனத்தின் மீது,

திருத்தணி-திருத்தணி அருகே, இளைஞர் ஒருவர் தன் பிறந்த நாளில், பட்டா கத்தியால் 'கேக்' வெட்டி கொண்டாடியதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.திருத்தணி ஒன்றியம், மத்துார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 22. நேற்று முன்தினம், உதயகுமார், தன் பிறந்த நாளையொட்டி, நண்பர்கள் சிலருடன், காலனி அருகே உள்ள சுடுகாடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.அங்கு, வாகனத்தின் மீது, கேக் வைத்து, இரண்டரை அடி நீளமுள்ள பட்டா கத்தியால், கேக் வெட்டி, நண்பர்களுக்கு கொடுத்து கொண்டாடினார்.மேலும், பட்டா கத்தியால் உதயகுமார் கேக் வெட்டியதை மொபைல்போன் மூலம் படம் பிடித்து, சக நண்பர்களுக்கு 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியுள்ளார்.திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உதயகுமாரை கைது செய்து, பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். உதயகுமார் மீது, ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X