பொது செய்தி

தமிழ்நாடு

வீடு ஒப்படைப்பு தாமதம் ரூ.7 லட்சம் இழப்பீடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை-ஒப்பந்தப்படி வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், 7 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கிண்டியில் ஒரு தனியார் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை அறிவித்தது. அதில், வீடு வாங்க, காஞ்சனமாலா என்பவர், 2016ல், 1.82 கோடி ரூபாய் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, 2019ல் வீடு

சென்னை-ஒப்பந்தப்படி வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், 7 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கிண்டியில் ஒரு தனியார் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை அறிவித்தது. அதில், வீடு வாங்க, காஞ்சனமாலா என்பவர், 2016ல், 1.82 கோடி ரூபாய் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, 2019ல் வீடு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இது குறித்து, காஞ்சனமாலா, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். இந்த மனு தொடர்பாக, ஆணைய விசாரணை அலுவலர்சரவணன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் குறிப்பிட்டபடி, கட்டுமான நிறுவனம் ஒப்பந்தப்படி வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. எனவே, மனுதாரர் செலுத்திய, 1.82 கோடி ரூபாயை, வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பி தர வேண்டும். மேலும், மனுதாரருக்கு, 7 லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்காக, 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X