பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த தாய்க்கு சிலை: 13வது மகன் நெகிழ்ச்சி

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மணலி: உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி, சிலை அமைத்து வழிபாடு செய்து வரும், 13வது மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.சென்னை மணலி, ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர் மனைவி சிவகலை, 84. இந்த தம்பதிக்கு 10 மகன்கள், மூன்று மகள்கள் என, 13 பிள்ளைகள்.சிவகலையின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு
சென்னை மணலி, உயிரிழந்த தாய்க்கு சிலை, 13வது மகன் நெகிழ்ச்சி, நலத்திட்டம் வழங்கல்

மணலி: உயிரிழந்த தாய்க்கு கோவில் கட்டி, சிலை அமைத்து வழிபாடு செய்து வரும், 13வது மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

சென்னை மணலி, ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர் மனைவி சிவகலை, 84. இந்த தம்பதிக்கு 10 மகன்கள், மூன்று மகள்கள் என, 13 பிள்ளைகள்.சிவகலையின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு அவரது, 12வது மகன் கோட்டீஸ்வரன், கொரோனாவால் இறந்தார். இந்த அதிர்ச்சியால், மூன்று நாட்களில் சிவகலையும் உயிரிழந்தார். நேற்று முன்தினம், சிவகலையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சிவகலையின் 13வது மகனான சரவணன், மாமல்லபுரம் சிற்ப கலைஞர் ஒருவரிடம், தன் தாய்க்கு சிலை வடிக்க கோரினார். தன் வீட்டின் முன், தாயின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்து, சரவணன் கோவில் எழுப்பினார். சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு படையல் வைக்கப்பட்டது. இதில் சிவகலையின் பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் என, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும், 501 பேருக்கு அன்னதானம்; 50 பேருக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி, சிவகலையின் குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
01-அக்-202100:35:27 IST Report Abuse
THINAKAREN KARAMANI தாய் மீது இவ்வளவு அன்புகொண்ட மகனைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகும். அந்த மகனுக்கு வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
30-செப்-202116:13:24 IST Report Abuse
அப்புசாமி குழந்தை பெறுவதையா ஃபுல்டைமா செஞ்சிருக்கார். அதுக்கே தனியா அவார்டு குடுக்கணும்.
Rate this:
mohan - chennai,இந்தியா
30-செப்-202120:23:05 IST Report Abuse
mohanமகன்கள் உணர்ந்திருக்கின்றனர் , தங்களது தாய் நல்ல படியாக வளர்த்துள்ளார் என்பதை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X