பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பால ரயில் பாதை சுவர்களில் தனியார் விளம்பரத்திற்கு ஏற்பாடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை-கடற்கரை - வேளச்சேரி இடையே, மேம்பால ரயில் நிலையங்களில், விளம்பரம் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கான முயற்சியில், சென்னை ரயில்வே கோட்டம் ஈடுபட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தின் சார்பில், புறநகர் மின்சார ரயில்கள், நிலையங்களில், தனியார் விளம்பரங்கள் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி மின்சார ரயில்களில், வெளிப்புறத்தில் தனியார் விளம்பரம்

சென்னை-கடற்கரை - வேளச்சேரி இடையே, மேம்பால ரயில் நிலையங்களில், விளம்பரம் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கான முயற்சியில், சென்னை ரயில்வே கோட்டம் ஈடுபட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தின் சார்பில், புறநகர் மின்சார ரயில்கள், நிலையங்களில், தனியார் விளம்பரங்கள் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி மின்சார ரயில்களில், வெளிப்புறத்தில் தனியார் விளம்பரம் செய்வதற்கு சமீபத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு, ஒப்பந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னையில், கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரைவிளக்கம், முண்டககண்ணியம்மன் கோவில், மயிலாப்பூர்.மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்துரிபா காந்தி நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி நிலையங்கள் மேம்பாலத்தில் அமைந்துள்ளன. இவைகளிலும், ரயில் பாதை மேம்பாலத்திலும், கீழ் பாலத்திலும், தனியார் விளம்பரம் வாயிலாக, வருவாய் ஈட்டுவதற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.சென்னை மாநகரில், தனியார் மற்றும் பொது இடங்களில் உள்ள சுவர்கள் மற்றும் சாலைகளில், விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதை சாதகமாக பயன்படுத்தி, ரயில்வேயிக்கு சொந்தமான இடங்களில் விளம்பரத்திற்கு அனுமதி வழங்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சியில் களம் இறங்கியுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X