பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர்கள் விழிப்புணர்வு பேரணி

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை-உலக இதய தினத்தையொட்டி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்., 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், இதயவியல் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மருத்துவமனை இயக்குனர் மணி, மருத்துவ நிலைய அலுவலர் ஆனந்த் பிரதாப்
 டாக்டர்கள் விழிப்புணர்வு பேரணி

சென்னை-உலக இதய தினத்தையொட்டி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்., 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், இதயவியல் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மருத்துவமனை இயக்குனர் மணி, மருத்துவ நிலைய அலுவலர் ஆனந்த் பிரதாப் தலைமையில் நடந்த பேரணியில், டாக்டர்கள், நர்ஸ்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.இது குறித்து, மருத்துவ மனை இயக்குனர் மணி கூறியதாவது:நல்ல உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே, இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம். மேலும், இதய நோய் இல்லாமல் வாழ, புகைப்பழக்கத்தை கைவிட்டு, மன அழுத்தத்தை குறைத்து, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதே போல் ரத்த சர்க்கரை, ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்து, பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்களை அதிகளவில் சாப்பிட்டால், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதே போல் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையில், இதய பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X