சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரம் 4 'டூ - வீலர்' எரிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
டி.பி.சத்திரம்-டி.பி.சத்திரத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், நான்கு இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.டி.பி.சத்திரம் 14வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மார்டின், 51. இவரது வீட்டின் முன், இவரது இருசக்கர வாகனங்கள் இரண்டு உட்பட நான்கு இருசக்கர வாகனங்கள்

டி.பி.சத்திரம்-டி.பி.சத்திரத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், நான்கு இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.டி.பி.சத்திரம் 14வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மார்டின், 51. இவரது வீட்டின் முன், இவரது இருசக்கர வாகனங்கள் இரண்டு உட்பட நான்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு, அவை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இது குறித்து, டி.பி.சத்திரம் போலீசில் நேற்று காலை புகார் அளிக்கப்பட்டது.விசாரணையில், மார்டின் மருமகன் அரவிந்த், 27, என்பவருக்கும், அதே பகுதியில் உள்ள திருமணமான, 24 வயது பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, அப்பெண்ணின் நண்பரான கீழ்ப்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்பவருக்கும், அரவிந்துக்கும் இரண்டு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில், டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள சமூதாய நலக்கூடத்தில், நேற்று முன்தினம் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மணிகண்டனை, அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ராணி அண்ணா நகரைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவருடன், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, அரவிந்த் வாகனம் என நினைத்து, மாமனாரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.கொழுந்து விட்டெரிந்த தீ, அடுத்தடுத்த வாகனங்களுக்கும் பரவியதில், நான்கு வாகனங்களும் தீக்கிரையாயின. இது தொடர்பாக, மணிகண்டன் மற்றும் சஞ்சய் ஆகியோரை, டி.பி.சத்திரம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X