பொது செய்தி

தமிழ்நாடு

மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-''மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவில் துவக்கப்படும்,'' என, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் தீரஜ்குமார் கூறினார்.தி.மு.க., ஆட்சியில், 2007ல், 1,815 கோடி ரூபாய் செலவில், மதுர வாயல் - சென்னை துறைமுகம் இடையே, கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், மதுரவாயலில் அடிக்கல்

சென்னை-''மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவில் துவக்கப்படும்,'' என, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் தீரஜ்குமார் கூறினார்.தி.மு.க., ஆட்சியில், 2007ல், 1,815 கோடி ரூபாய் செலவில், மதுர வாயல் - சென்னை துறைமுகம் இடையே, கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், மதுரவாயலில் அடிக்கல் நாட்டி, பறக்கும் சாலை அமைக்கும் பணியை துவக்கிவைத்தார். இரண்டு அடுக்குபின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், புதிய அரசு கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில், இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலை பணிகளுக்கு தடை விதித்தது.தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், இத்திட்டம் துவக்கப்படும் என, அறிவித்தார். கடந்த, 2018ல் திட்ட மதிப்பீடு, 2,400 கோடி ரூபாயாகவும், அதன் பின், 3,087 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.சென்னை துறைமுகத்தில் துவங்கி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக, மதுரவாயலில் சாலை முடிவடையும். இந்த சாலைக்காக, 6,993 சதுர மீட்டர் தனியார் நிலம், 2,722 சதுர மீட்டர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சாலை அமைய உள்ள துாரத்தில், 10 கி.மீ., துாரம் கூவம் ஆற்றில் வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை, நவீன தொழில்நுட்பத்துடன், இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.பரிசீலனைமுதல் அடுக்கில், பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில், ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும். இதில், அணுகு சாலைகள் எங்கு அமைப்பது என்பது, பரிசீலனையில் உள்ளது. இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள, நான்கு வழிச்சாலை, நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும்.அதில், கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மட்டும் செல்லும்.இது குறித்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் தீரஜ்குமார் கூறியதாவது:மதுரவாயல் - துறைமுகம் சாலை, கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்லும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட உள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மூன்று மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. அதன் பின், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது; விரைவில் பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
30-செப்-202118:43:47 IST Report Abuse
JeevaKiran நல்ல திட்டம். உடனடியாக செயல் படுத்துங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X