சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு உதவி கேட்டு மோசடி செய்தவர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை,-மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் படத்தை அனுப்பி, அரசியல் கட்சி தலைவர்களின் பெயரை பயன்படுத்தி, வழக்கறிஞர் உள்ளிட்டோரிடம், பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜயகுமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:மொபைல் போன் வாயிலாக, துாத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன்
 சிகிச்சைக்கு உதவி கேட்டு மோசடி செய்தவர் கைது

சென்னை,-மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் படத்தை அனுப்பி, அரசியல் கட்சி தலைவர்களின் பெயரை பயன்படுத்தி, வழக்கறிஞர் உள்ளிட்டோரிடம், பல லட்சம் ரூபாய் சுருட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜயகுமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:மொபைல் போன் வாயிலாக, துாத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், எங்களது சீனியர் வழக்கறிஞர் ஜோயலை தொடர்பு கொண்டு, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் தன் மகளை காப்பாற்றுமாறு கூறினார்.அவரது மகள் சிகிச்சை பெற்று வருவதற்கான படத்தையும், 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பினார். அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தான், உங்களின் மொபைல் போன் எண்ணை கொடுத்தார் என, கூறினார். இதை நம்பி, 'கூகுள் பே' வாயிலாக, ஜோயல், 15 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். நாகராஜன் மீது சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து விசாரித்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது, புதுச்சேரி, வில்லியனுார், பாரதி நகர் அரியூரைச் சேர்ந்த சிவக்குமார், 41 என்பவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.துாத்துக்குடியில் இருந்து நாகராஜன் என்பவர் பேசுவது போல நடித்து, அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி, அவர்களின் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர் உட்பட, 100க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளார்.மோசடிக்கு, தன் மகள் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற படங்கள் மற்றும் கட்டண ரசீதை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவக்குமாரை நேற்று கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X