சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.6 கோடி வங்கி கடன் மோசடி பெண் உட்பட 9 பேர் சிக்கினர்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை-பல்வேறு வங்கிகளில், போலி ஆவணங்கள் வாயிலாக, 6 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். சேலையூர், ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நஜிமுதீன், 28. இவர், பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள, தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, போலி ஆவணங்கள் வாயிலாக, 44 பேர் மீது வங்கி கணக்கு துவங்கி, அதில், 15 பேருக்கு, 1.51 லட்சம் ரூபாய் தனி நபர் கடன்

சென்னை-பல்வேறு வங்கிகளில், போலி ஆவணங்கள் வாயிலாக, 6 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். சேலையூர், ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நஜிமுதீன், 28. இவர், பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள, தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, போலி ஆவணங்கள் வாயிலாக, 44 பேர் மீது வங்கி கணக்கு துவங்கி, அதில், 15 பேருக்கு, 1.51 லட்சம் ரூபாய் தனி நபர் கடன் வழங்கியது போல மோசடி செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக, வண்டலுாரைச் சேர்ந்த பிரித்விராஜ், 35, இருந்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துவேல், 43. இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள, வங்கி ஒன்றில், ரைஸ் மில் துவங்க, வீடு வாங்குவதற்கு என, போலி ஆவணங்கள் வாயிலாக, 1.43 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார் வேளச்சேரியைச் சேர்ந்தவர் மிராக்ளின் டோரிஸ், 33. இவரது கணவர் தங்கராஜ், 37. இவர்கள், கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில், போலி ஆவணங்கள் வாயிலாக, 49.12 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி மோசடி செய்துஉள்ளனர் மதுரையைச் சேர்ந்தவர் பாலாஜி, 35. இவர், மேடவாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்தார். அதே பகுதியைச் சேர்ந்த சியாமளா தேவி என்பவர், போலி ஆவணங்கள் வாயிலாக, 75 லட்சம் ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்ய உடந்தையாக இருந்துள்ளார் ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் முகமது முசாமில், 35. இவர், விருகம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில், போலி ஆவணங்கள் வாயிலாக 1.95 கோடி ரூபாய் வீட்டு கடன் வாங்கி மோசடி செய்து உள்ளார். மொத்தம், 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இவர்கள் ஒன்பது பேரையும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X