சம்பவம் செய்தி

தமிழ்நாடு

400 பேரிடம் ரூ.6 கோடி 'லபக்'கிய கில்லாடி கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை-தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக, 400 பேரிடம், 6 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.பெருங்குடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 48. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 400 பேருக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியத்தில், தனக்கு தெரிந்த அதிகாரிகள் வாயிலாக வீடு வாங்கித் தருவதாக, தலா, 1.50 லட்சம் ரூபாய்

சென்னை-தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக, 400 பேரிடம், 6 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.பெருங்குடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 48. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 400 பேருக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியத்தில், தனக்கு தெரிந்த அதிகாரிகள் வாயிலாக வீடு வாங்கித் தருவதாக, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம், 6 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.இதற்கு கண்ணகி நகரைச் சேர்ந்த முரளி, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ராஜு ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இது குறித்து, மணிகண்டன் உள்ளிட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X