பஜாரில் திருடர்கள் தொல்லை| Dinamalar

பஜாரில் திருடர்கள் தொல்லை

Added : செப் 30, 2021
Share
திருவாலங்காடு--கனகம்மாசத்திரம் பஜாரில், பெண்கள் உள்ள கடைகளை நோட்டமிட்டு, ஒரே வாரத்தில் இரண்டு கடைகளில் நகை பறிக்க திருடர்கள் முயற்சி செய்துள்ளனர்.நேற்று முன்தினம், கடைக்கு வாட்டர் பாட்டீல் வாங்குவதை போன்று வந்த இளைஞர் ஒருவர் கடைக்கார பெண் குனிந்து வாட்டர் பாட்டீல் எடுக்கும் போது கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.அப்போது அந்த கடைக்கார பெண்

திருவாலங்காடு--கனகம்மாசத்திரம் பஜாரில், பெண்கள் உள்ள கடைகளை நோட்டமிட்டு, ஒரே வாரத்தில் இரண்டு கடைகளில் நகை பறிக்க திருடர்கள் முயற்சி செய்துள்ளனர்.நேற்று முன்தினம், கடைக்கு வாட்டர் பாட்டீல் வாங்குவதை போன்று வந்த இளைஞர் ஒருவர் கடைக்கார பெண் குனிந்து வாட்டர் பாட்டீல் எடுக்கும் போது கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.அப்போது அந்த கடைக்கார பெண் சுதாரித்துக் கொண்ட நிலையில், இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். சமீப காலமாக இதுபோன்ற சம்பவம் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் நடந்து வருவதால், வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து, கனகம்மாசத்திரம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X