தமிழ்நாடு

டாப் 100 மாணவர்களை தேர்ந்தெடுக்க தேர்வு; இடஒதுக்கீடு சலுகை பெற புது முயற்சி

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
Advertisement
அரசுப்பள்ளிகளில் சிறப்பாக படிக்கும், 100 மாணவர்களை தேர்வு செய்து, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளிலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை, கோவை மாவட்ட
டாப் 100 மாணவர்களை தேர்ந்தெடுக்க தேர்வு; இடஒதுக்கீடு சலுகை பெற புது முயற்சி

அரசுப்பள்ளிகளில் சிறப்பாக படிக்கும், 100 மாணவர்களை தேர்வு செய்து, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளிலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை, கோவை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வு மட்டுமல்லாமல், பொதுத்தேர்விலும் மதிப்பெண்களை உயர்த்த, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, 750 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களை இணைத்து, ஆன்லைன் மூலம் நடத்திய வெப்மினாரில், மாணவர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு இருப்பதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து, மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் அதிக மதிப்பெண்கள் பெறும் 100 மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, சிறந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாடநுால் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றவர்கள், நீட் பயிற்சி வகுப்பு கையாள பயிற்சி பெற்றவர்கள் மற்றும் கடின பாடங்களையும் எளிதாக கையாளும் ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு விரைவில், மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி வழங்கிய பிறகு, வார இறுதி நாட்களில், ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்லைன் மூலமாகவோ, பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:அரசுப்பள்ளி மாணவர்களுக்கான, இடஒதுக்கீட்டு சலுகையை, முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வெப்மினார் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டபோது, பலரும் ஆப்லைன் வகுப்புகளுக்கே விருப்பம் தெரிவிக்கின்றனர்.நெட்வொர்க் பிரச்னையால், ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்கள், முழுமையாக மாணவர்களை சென்றடையுமா என தெரியவில்லை.

இயக்குனரகத்தில் அனுமதி பெற்ற பிறகு, வகுப்புகள் துவங்கப்படும். தற்போது பொது வினாத்தாள் தயாரித்து, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் குழுவாக பிரித்து, போட்டித்தேர்வு, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பயிற்சி வழங்கப்படும்.முதற்கட்ட தேர்வு வரும் 1ம் தேதி, அந்தந்த பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிலபஸ், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X